Saturday, February 23, 2008

வீடுகாளாகும் விளைநிலங்கள்

நான் நகரத்தில் வசித்தாலும் கூட எங்கள் வீடு நகரத்தின் கடைசியில் இருந்ததால் கிராமத்திணுடான என்னுடைய தொடர்பு தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. பள்ளி விடுமுறை நாட்களில் அருகில் இருந்த கிராமத்திற்குச் சென்று வயற்கிணற்றில் நண்பர்களுடன் மணிகணக்காக குளித்து ஆனந்தப்பட்டிருக்கிறேன். இவை எல்லாம் பத்து வருடத்திற்கு முன்னால் ஆனால் இன்று எங்கள் வீட்டிலிருந்து பத்து கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்தில் இருந்த அனைத்து விளைநிலங்களும் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு விட்டன கண்ணுக்கெட்டியரம் வரை தாரிசாக்கபட்ட விளைநிலங்கள், வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்கள், தண்ணீர் இறைக்கப்படாத வயற்கிணறுகள். இந்த இடங்களை கொஞ்சம் கொஞ்சமாக புதிய புதிய வீடுகள் ஆக்ரமித்துக் கொண்டிருக்கின்றன். இப்படித்தான் அனைத்து நகரங்களும் வேகமாக விரிவடைந்து வருகின்றன. மக்கட்தொகை பெருக்கத்திற்கேற்ப நகரங்கள் விரிவடைகின்றன. நகர்புறம் விரிவாக்கத்தின் உடனடியான பெரும் பாதிப்பை நம்மால் உணரமுடியாவிட்டாலும், இப்பாதிப்பு நம் சமூகத்தையும், நம் அடுத்த தலைமுறையையும் நிச்சயம் பாதிக்கும். இப்பொழுதே சில பாதிப்புகளை நம்மால் உணரமுடிகிறது மாசடைந்த காற்று, பாதாளத்திற்கே சென்றுவிட்ட நிலத்தடி தண்ணீர், அரிதாகிவரும் சில பறவை இனங்கள், விலங்குகள். குறைந்து வரும் மழை அளவு.

உதாரணத்திற்கு நான் பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருந்நத காலங்களில் 10 அல்லது 15 வருடங்களுக்கு முன்னால், தவிட்டுக்குருவி என்ற ஒரு குருவி வகை பறவை எங்கள் வீட்டு படுக்கை அறையில் கூடுகட்டி இருந்தது. நாங்கள் சன்னலை அடைப்பதற்கு முன்னாலே மாலை 5 மணிக்கெல்லாம் தன் கூட்டிற்கு வந்துவிடும் அதேபோல் காலை 5 ½ மணிக்கெல்லாம் விழித்துக் கொண்டுவிடும். சன்னலை திறக்கும் வரை கத்திக் கொண்டே இருக்கும் சன்னலை திறந்தவுடன் செல்லும் குருவி மாலைதான் திரும்ப வரும். தன் கூட்டில் குஞ்சு பொறித்த காலங்களில் மட்டும் அடிக்கடி கூட்டிற்கு வரும். அப்றவையினால் எங்களுக்கு சில அசௌகரியங்கள் இருந்தாலும் கூட அப்பறவையே தன் வருகையை நிறுத்திக் கொள்ளும் வரை நாங்கள் அதற்கு எந்த தொந்தரவும் கொடுத்தில்லை. அப்பறவையினத்தை சில வருடங்களாக தேடிப்பார்க்கிறேன் அப்பறவையினை எண்ணால் எங்கள் பகுதியில் காணமுடியவில்லை. இப்பறவையினம் அழிந்து விட்டதா? அல்லது இடம் பெயர்ந்து விட்டதா என்று தெரியவில்லை.

எங்கள் வீட்டுக்கருகில் ஒரு சிறிய குளம் ஒன்று இருந்தது அதனால் எங்கள் வீட்டுக் கிணற்றில் எக்காலத்திலும் தண்ணீர் மேல் மட்டத்திலே இருக்கும். ஆனால் இன்று அக்குளம் நகராட்சியின் வரைபடத்தில் மட்டுமே உள்ளது முற்றிலுமாக ஆக்ரமிப்பாளர்களால் ஆக்ரமிக்கப்பட்டுவிட்டது. இதனால் எங்கள் கிணறு வெயில் காலங்களில் வற்றிவிடுகிறது.
இது போல் நிறைய விஷயங்களை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு இல்லாமலேயே நாம் வாழந்து கொண்டிருக்கிறோம்.

நம் முன்னோர்கள் இயற்கையோடு இணைந்த வாழக்கையைத்தான் வாழந்தார்கள், நாம் வாழ்வதற்கு நல்ல உலகத்தைத்தான் விட்டுச்சென்றார்கள். ஆனால் நாம் அடுத்த தலைமுறையினருக்கு வாழத்தகுதியற்ற உலகத்தைத்தான் விட்டுச்செல்லப்போகிறோம்.
அறிவியல் வளர்ச்சியினால் நம் ஆயுக்காலம் வேண்டுமானால் நீண்டிருக்கலாம். நம்முடைய சொகுசு வாழ்க்கைக்காக இந்த உலகத்தை சுரண்டிக் கொண்டிருக்கிறோம்.

சிந்திப்போம் ! இந்த உலகத்தை காப்பாற்றுவோம்.

1 comments:

Unknown said...

Fine...keep writing


Free Blogger Templates by Isnaini Dot Com. Supported by Interior Design. Powered by Blogger