Monday, February 11, 2008

காலி கோப்பை - ஜென்

ஒரு ஜென் ஆசிரியர் வெகு அமைதியாய் மக்களுக்கு ஜென் பற்றி போதித்துக் கொண்டு இருந்தார். அதனால் அவருக்கு அந்த வட்டாரத்தில் தனிப்பெருமையும் செல்வாக்கும் இருந்தது. அந்த நாட்டு பேரறிஞர் என அரசனிடம் பட்டம் வாங்கிய ஒருவருக்கு இது பொறுக்கவில்லை. உடனே அவர் ஜென் என்பது வெறும் பம்மாத்து வேலை. அதை பொய் என்று நிருபித்து காண்பிக்கிறேன் என்று கூறி ஆசிரியரை வாதுக்கு அழைத்து ஜென் என்றால் என்ன என்று சொல்லுங்கள் என்றார். ஆசிரியரும் அந்த அறிஞரைத் தன் குடிலுக்கு அழைத்து சென்று அமரவைத்து ஜப்பானிய முறையில் டீ உபச்சாரம் செய்ய ஆரம்பித்தார். தேவையான எல்லா பொருள்களையும் அவர் முன்னே வைத்து கோப்பையில் முறைப்படி தேநீர் வார்க்க ஆரம்பித்தார். கோப்பை நிரம்பிய பின்னும் ஊற்றிகொண்டே இருந்தார். ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க இயலாத அந்த அறிஞர் "நிரம்பிய பின்னும் ஊற்றுகிறீர்களே இது எப்படி சரி பட்டு வரும் முதலில் கோப்பையில் இருப்பதை நான் காலி செய்த பிறகு ஏன் மறுபடி நிரப்ப கூடாது?" எனக் கேட்க.. ஜென் ஆசான் பதிலிறுத்தார்."அய்யா நீங்களும் இந்தக் கோப்பையும் ஒன்று, முதலில் உள்ளே உள்ளதை வெறுமையாக்குங்கள் அப்புறம் நிரப்பத் துவங்கலாம்" என்றார்.

1 comments:

Ramesh said...

Dear Sir,
its fine sir

pls send me tamil font name because am not able to view proper tamiz

Regards,
RameshV


Free Blogger Templates by Isnaini Dot Com. Supported by Interior Design. Powered by Blogger